சனி, 3 ஏப்ரல், 2010

சோதிடமும் நானும் 1

சோதிடமும் நானும் 1

முன் குறிப்பு
ஜோதிடம் என்பது ஒரு கடல் போன்றது . அதை முழுமையாக அறிந்து
கொள்ள முடியாது என்பர். உண்மையை சொல்லப் போனால் ஜோதிடத்தைப் பற்றி
எனக்கு ஒன்றுமே தெரியாது .

ஆனாலும் இந்த ஜோதிடக் கலை எப்படியோ வந்து முழுமையாக என்னைக் கவ்விக் கொண்டது எனலாம்.

எத்தனையோ ஜோதிட நிபுணர்கள் வெறும் ராசிக் கட்டத்தைக் கொண்டே டக் டக் கென்று
பலன் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஆனால் நானோ அதை கையில் வாங்கி வைத்துக் கொண்டு பேந்த பேந்த முழித்துக் கொண்டிருப்பேன்.

ஆயினும் ஜோதிடம் என்பது ஆயக் கலைகள்
அறுபத்து நான்கில் ஒன்று அல்லவா?

அந்த அற்புதமான கலையை ப் பற்றி நான் தெரிந்து கொண்டது பற்றியும் அதன் அருமை
பெருமைகளைப் பற்றியும் நானறிந்த இந்த சிறிய அளவில் எடுத்தியம்ப விரும்புகின்றேன்.

மேலும் ஜோதிடர்களிடம் செல்லும் மக்கள் எந்தெந்த மாதிரியான கேள்விகளைக் கேட்க வேண்டும் என்றும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

கடலோரத்தில் நின்றுக் கொண்டு அலையைப் பார்த்துக் கொண்டே சிப்பியைப் பொறுக்கும் ஒரு சிறுவனைப்போலத்தான் ஜோதிடத்தில் என் பங்கும்.

இருந்தாலும் அதிலேயே வியக்குமளவு விஷயங்கள் இருப்பதால் உள்ளே இறங்கி முத்தெடுக்கும் பலரைப் ப்ற்றி என்ன சொல்வது?

கடவுள் என்பது எப்படி நூற்றுக்கு நூறு உண்மையான விஷயமோ அப்படியே அவரால் படைக்கப் பட்ட அனைத்து விஷயங்களுமே நூற்றுக்கு நூறு உண்மையாகத் தான் இருக்க வேண்டும்.

ஆனால் அவைகள் எல்லாம் மனிதனால் களங்கப் படுத்தப் பட்டு விட்டன என்பதே உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக