வியாழன், 15 ஏப்ரல், 2010

சோதிடமும் நானும் 2

சோதிடமும் நானும் 2


எனது முதல் அனுபவம் {அறிமுகம்}

புகழ் பெற்ற எழுத்தாளர் திரு அகிலன் அவர்களின் புதல்வர்களில்ஒருவரான திரு அ .ஜகன்னாதன்அவர்களுடன் வள்ளுவர் கோட்டம் வழியே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தேன். கூடவே எனது இன்னொரு நண்பரும் வந்து கொண்டிருந்தார்,அப்போது ஜகன் என் நண்பரிடம் கேட்டார்.

நீங்கள் எந்த மாத்த்தில் பிறந்தீர்கள் என்று . சொன்னவுடன் இவர் உடனேஅவரைப் பற்றி கிடு கிடுவென்று சொல்ல‌ ஆரம்பித்துவிட்டார்.

எனக்கு ஒரே ஆச்சரியம். என்ன இது? பிறந்த தேதியும் மாதமும் சொன்ன‌ உடனே இப்படி சொல்ல ஆரம்பித்து விட்டாரே என்று அவரிடம் கேட்டேன்.. அதற்கு அவர் ஒருபுத்தகத்தை பரிந்துரை செய்தார்.
அது “லின்டா குட்மென்”{linda goodman}அவர்கள் எழுதிய
“சன் சைன்” {sun sign} என்பதேயாகும்.

உடனே அந்த புத்தகத்தைவாங்கினேன். .படித்தேன்
அதன் பிறகு விளையாட்டாக எல்லோரிடமும் அவர்கள் பிறந்த மாதம் தேதிகேடடு அவர்களிடம்அவர்களது குணாதிசயம் பற்றி கூற ஆரம்பித்தேன்.

ஒரு சமயம் ஒரு கிராமத்திற்கு திருவிழா ஒன்றிற்காக சென்றிருந்தேன். அங்கு ஒரு திண்ணையில்அமர்ந்திருந்த போது என்னை சுற்றி ஒரு கூட்டம் அமர்ந்தது. யாரோ எனக்கு ஜோசியம் தெரியும் என்று சொல்ல‌
நான் மாட்டிக்கொண்டேன்

.எல்லோரும் தங்களைப் பற்றிக்கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். நானும் வரிசையாக‌அவர்களைப் பறறி சொன்னதும் அவர்கள் ஆச்சரியப்பட்டனர். திடீரென்று ஒரு பெண்மனி என்னிடம் தன்னுடைய மகன் நன்றாகப் படிப்பானா என்று கேட்டவுடன் எனக்கு பதில் சொல்லமுடியவில்லை. நான் சொன்னேன்.

அம்மா என்னால் உங்களது குணாதிசயங்களைப் பற்றி மட்டும் வேண்டுமானால் சொல்லமுடியுமே தவிர மற்றபடி என்னால் பலன்கள் எல்லாம் கூறமுடியாது என்றேன்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பலன் எப்படி கூறுவது யாரிடம் இது பற்றி கேட்கலாம் என்று யோசித்தபோது எனது நண்பர் திரு ஜயந்தி ரவி அவர்கள் இதற்கு பாரம்பரிய ஜோதிடத்தை முறைப்படி கற்றுக் கொள்ள வேண்டும். நிறைய விஷயம் இருக்கிறது என்றார்கள்.

உடனே எனக்கு அது சம்பந்தமான் புத்தகம் வாங்கி படிக்கவேண்டும் என்று ஆவல் எழுந்தது. வாங்கினேன் படித்தேன் புரியவில்லை.

மேலும் அதெல்லாம் கூட சில சமயம் தவறாகப் போய்விடுவதுண்டு என்று கேள்விப்பட்டதும் அந்த ஆசையும் போனது.
அதன் பிறகு ஒரு நாள் எனது அண்ணி திருமதி கீதா அவர்கள் தசாபுத்தியை பற்றி ஏதோ கேள்வி கேட்டுவைக்க‌ நான் திருதிருவென்றுவிழித்தேன்.

பிறகுதான் நல்ல முறையில் இதை கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆவல் எழுந்தது. உடனே இருப்பதிலேயே மிகவும் துல்லியமாக பலன்சொல்லக் கூடிய முறை ஒன்று திரு கிருஷ்ண் மூர்த்தி அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று அறிந்தேன்.

அவரது புதல்வர்களில் ஒருவரானதிரு ஹரிஹரன் அவர்களிடம் கற்றுக் கொண்டேன். இவர் தான் ஜோதிடத்தில் எனது முதல் குரு நாதர்.

"தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திரு நாமம் செப்பல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தாமே"

அதன் பிறகு ஹோராரி முறையில் நான் சொன்ன விஷயங்கள் எல்லாம் பலிக்க ஆரம்பித்தது. நிச்சயதார்தம், திருமணத்
தேதி போன்றவை எல்லாம் சரியாக பலிக்க ஆரம்பித்தது. ஆனாலும் எனக்குள் இன்னும் திருப்தி யடையவில்லை……………………

தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக