வியாழன், 15 ஏப்ரல், 2010

சோதிடமும் நானும் 3

சோதிடமும் நானும் 3



பிறகு இன்னும் சற்று ஆழமாகச் சென்று திரு பாஸ்கரன் அவர்களால் மேம்படுத்த முறையையும் கற்றுக் கொண்டேன்

சென்னை காட்டுப்பாக்கத்திலிருக்கும்திரு A. தேவராஜ், அவர்களிடம் கற்றுக் கொண்டேன்.
மிகவும் அற்புதமான முறையில் ஆறே மாதங்களில் பலன் சொல்லும் அளவிற்கு கற்றுத்
தந்தார்.

ஒரு குருவை இப்படி யாரும் பார்க்கமுடியாது. ஏனெனில் நீங்கள் ஆயிரம் முறை
சந்தேகங்கள் கேட்டாலும் சிறிதும் சலிப்பின்றி தயக்கமின்றி திரும்பத் திரும்ப தீர்த்து
வைப்பார்.
அதே சமயம் மிகவும் குறைந்த கட்டணமும் கூட.

அப்போது தான் எனக்கு கண் திறந்தது. வெறும் 30 செகண்டுகளில் வித்தியாசப்படும் குழந்தைகளிடம் பெரும் மாறுதல்களைக் காண முடியும் .அப்படியானால் வெறும் ராசிக் கட்டத்தையும் நவாம்ச கட்டத்தையும் வைத்துக் கொண்டு நாம் ஜோசியரைத் தேடிக் கொண்டு ஓடுவதைப் பற்றி
என்ன சொல்வது?

ஒரு பெரிய ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் நர்ஸ் ஒருவர் என்னிடம்
ஜோதிடம் பார்க்க ஒருமுறை வந்திருந்தார்.வரும் போதே எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை என்றார்.

நேரம் சரியில்லாத போது தானே எல்லோரும் ஜோசியரைத் தேடி செல்வர். அப்படித்தான் அவரும் வந்திருந்தார். .

நானும் "சரி நீங்கள்என்ன தெரிந்து கொள்ள வேண்டும் "என்று கேட்டேன்.
எல்லாம் பார்த்து முடித்தபிறகு நன்றி சொல்லிவிட்டு கிளம்பும் போது
நான் கேட்டேன்.

நீங்கள் பொதுவாக குழந்தை பிறந்ததும் எந்த நேரத்தைப் பெற்றோர்களிடம் கூறுகின்றீர்கள் ? குழந்தை வெளிவ்ந்த நேரமா? அல்லது
குழந்தை அழுகின்ற நேரமா அல்லது தொப்புள் கொடியை அறுக்கும் நேரமா என்று கேட்டேன்.

அதற்கு அந்த நர்ஸ்

" அட அதெல்லாம் யாருங்க கவனிக்க முடியும் ? குழந்தை வெளியே நல்லபடியாக வரவேண்டுமே என்ற டென்ஷனில்
தான் நாங்கள் எல்லோரும் இருப்போம். ஒரு தோராயமாகத்தான் எங்களால் சொல்ல முடியும் என்றார்.
உண்மைதானே அப்படியானால் 5 நிமிடம் அல்லது 3 நிமிடம் முன் பின் கூட இருக்க வாய்ப்புள்ளது அல்லவா?

ஆனால் பாரம்பர முறையை ப் பொறுத்தவரையில் எல்லோரும் பொதுவாக லக்கினத்தை கணக்கில் கொண்டு
12 ராசிக்கட்டத்தை வைத்து சொல்லும் போது பிரச்சினையில்லை. லக்கினம் சுமார் ஒரு மணி நேரம் 50 நிமிடம் வரை ஒரு ராசியில் இருப்பதுண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக