திங்கள், 19 ஏப்ரல், 2010

வியாழன், 15 ஏப்ரல், 2010

சோதிடமும் நானும் 4

சோதிடமும் நானும் 4
முன்பெல்லாம் சோதிடம் பற்றி அவ்வளவாக நூல்கள் வந்ததில்லை ஆனால் இப்போதோ வள வள வென்று ஏகப்பட்ட நூல்கள்.

அதில் முக்கால்வாசி எழுதப்படும் நோக்கம் தனக்கு தெரிந்தவற்றையும் பல நூல்களில் இருந்து சேகரிக்கப்பட்டும் , மொழி பெயர்க்கப்பட்டும், வியாபார நோக்கில் எழுதப்படுபவையாகவே இருக்கின்றது.

ஒரு சிலர் மட்டுமே நல்ல எண்ணத்தில் பிறருக்கு பயன் தரும் வகையில் தெளிவாக எழுதுகின்றனர்.அவர்களில் மறைந்த திரு பி.எஸ்.பி அவர்கள் எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எழுதியுள்ளார்.

மேலும் திரு மு . மாதேஸ்வரன் அவர்களும் நல்ல முறையில் சிறந்த புத்தகங்களை தந்திருக்கிறார். சோதிட திரட்டு மூன்று பகுதிகள், முகூர்த்த தரங்கினி, திசாபுத்திபலன் கள் குறித்து 12 நூல் கள் பெரிய அளவில் ஒவ்வொரு லக்னத்தில்
பிறந்தவர்களுக்கும் முறையே ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்க்கும் தெளிவாக கூறி இருக்கின்றார்.
நான் மிகவும் ரசித்துப் படித்த இன்னொரு புத்தகத்தின் ஆசிரியர். விகே சவுத்திரிV.K.CHOUDHRY
ஆவார்..
அவர் நிறைய மூல நூல்களை படித்து ஆராய்ச்சி செய்து, 28 வருடங்களுக்குப் பிறகு அனுபவமும் கலந்து தந்திருக்கின்றார்.

கலந்து காலத்திற்குத் தக்கபடி களைய வேன்டியதை யெல்லாம் களைந்து எழுதியிருக்கிறார் ஜோதிடத்தை நன்றாக முறையாகத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இவரது
புத்தகங்கள் வாங்கி பயனடையலாம். . ஆனால் எனக்கென்னவோ படித்த வுடன்
மறந்து விடுவதால் {கஜினி சூர்யா போல்} எனக்கெல்லாம் கேபி முறைதான்
ஒத்துவருகின்றது
.

சோதிடமும் நானும் 3

சோதிடமும் நானும் 3



பிறகு இன்னும் சற்று ஆழமாகச் சென்று திரு பாஸ்கரன் அவர்களால் மேம்படுத்த முறையையும் கற்றுக் கொண்டேன்

சென்னை காட்டுப்பாக்கத்திலிருக்கும்திரு A. தேவராஜ், அவர்களிடம் கற்றுக் கொண்டேன்.
மிகவும் அற்புதமான முறையில் ஆறே மாதங்களில் பலன் சொல்லும் அளவிற்கு கற்றுத்
தந்தார்.

ஒரு குருவை இப்படி யாரும் பார்க்கமுடியாது. ஏனெனில் நீங்கள் ஆயிரம் முறை
சந்தேகங்கள் கேட்டாலும் சிறிதும் சலிப்பின்றி தயக்கமின்றி திரும்பத் திரும்ப தீர்த்து
வைப்பார்.
அதே சமயம் மிகவும் குறைந்த கட்டணமும் கூட.

அப்போது தான் எனக்கு கண் திறந்தது. வெறும் 30 செகண்டுகளில் வித்தியாசப்படும் குழந்தைகளிடம் பெரும் மாறுதல்களைக் காண முடியும் .அப்படியானால் வெறும் ராசிக் கட்டத்தையும் நவாம்ச கட்டத்தையும் வைத்துக் கொண்டு நாம் ஜோசியரைத் தேடிக் கொண்டு ஓடுவதைப் பற்றி
என்ன சொல்வது?

ஒரு பெரிய ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் நர்ஸ் ஒருவர் என்னிடம்
ஜோதிடம் பார்க்க ஒருமுறை வந்திருந்தார்.வரும் போதே எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை என்றார்.

நேரம் சரியில்லாத போது தானே எல்லோரும் ஜோசியரைத் தேடி செல்வர். அப்படித்தான் அவரும் வந்திருந்தார். .

நானும் "சரி நீங்கள்என்ன தெரிந்து கொள்ள வேண்டும் "என்று கேட்டேன்.
எல்லாம் பார்த்து முடித்தபிறகு நன்றி சொல்லிவிட்டு கிளம்பும் போது
நான் கேட்டேன்.

நீங்கள் பொதுவாக குழந்தை பிறந்ததும் எந்த நேரத்தைப் பெற்றோர்களிடம் கூறுகின்றீர்கள் ? குழந்தை வெளிவ்ந்த நேரமா? அல்லது
குழந்தை அழுகின்ற நேரமா அல்லது தொப்புள் கொடியை அறுக்கும் நேரமா என்று கேட்டேன்.

அதற்கு அந்த நர்ஸ்

" அட அதெல்லாம் யாருங்க கவனிக்க முடியும் ? குழந்தை வெளியே நல்லபடியாக வரவேண்டுமே என்ற டென்ஷனில்
தான் நாங்கள் எல்லோரும் இருப்போம். ஒரு தோராயமாகத்தான் எங்களால் சொல்ல முடியும் என்றார்.
உண்மைதானே அப்படியானால் 5 நிமிடம் அல்லது 3 நிமிடம் முன் பின் கூட இருக்க வாய்ப்புள்ளது அல்லவா?

ஆனால் பாரம்பர முறையை ப் பொறுத்தவரையில் எல்லோரும் பொதுவாக லக்கினத்தை கணக்கில் கொண்டு
12 ராசிக்கட்டத்தை வைத்து சொல்லும் போது பிரச்சினையில்லை. லக்கினம் சுமார் ஒரு மணி நேரம் 50 நிமிடம் வரை ஒரு ராசியில் இருப்பதுண்டு

சோதிடமும் நானும் 2

சோதிடமும் நானும் 2


எனது முதல் அனுபவம் {அறிமுகம்}

புகழ் பெற்ற எழுத்தாளர் திரு அகிலன் அவர்களின் புதல்வர்களில்ஒருவரான திரு அ .ஜகன்னாதன்அவர்களுடன் வள்ளுவர் கோட்டம் வழியே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தேன். கூடவே எனது இன்னொரு நண்பரும் வந்து கொண்டிருந்தார்,அப்போது ஜகன் என் நண்பரிடம் கேட்டார்.

நீங்கள் எந்த மாத்த்தில் பிறந்தீர்கள் என்று . சொன்னவுடன் இவர் உடனேஅவரைப் பற்றி கிடு கிடுவென்று சொல்ல‌ ஆரம்பித்துவிட்டார்.

எனக்கு ஒரே ஆச்சரியம். என்ன இது? பிறந்த தேதியும் மாதமும் சொன்ன‌ உடனே இப்படி சொல்ல ஆரம்பித்து விட்டாரே என்று அவரிடம் கேட்டேன்.. அதற்கு அவர் ஒருபுத்தகத்தை பரிந்துரை செய்தார்.
அது “லின்டா குட்மென்”{linda goodman}அவர்கள் எழுதிய
“சன் சைன்” {sun sign} என்பதேயாகும்.

உடனே அந்த புத்தகத்தைவாங்கினேன். .படித்தேன்
அதன் பிறகு விளையாட்டாக எல்லோரிடமும் அவர்கள் பிறந்த மாதம் தேதிகேடடு அவர்களிடம்அவர்களது குணாதிசயம் பற்றி கூற ஆரம்பித்தேன்.

ஒரு சமயம் ஒரு கிராமத்திற்கு திருவிழா ஒன்றிற்காக சென்றிருந்தேன். அங்கு ஒரு திண்ணையில்அமர்ந்திருந்த போது என்னை சுற்றி ஒரு கூட்டம் அமர்ந்தது. யாரோ எனக்கு ஜோசியம் தெரியும் என்று சொல்ல‌
நான் மாட்டிக்கொண்டேன்

.எல்லோரும் தங்களைப் பற்றிக்கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். நானும் வரிசையாக‌அவர்களைப் பறறி சொன்னதும் அவர்கள் ஆச்சரியப்பட்டனர். திடீரென்று ஒரு பெண்மனி என்னிடம் தன்னுடைய மகன் நன்றாகப் படிப்பானா என்று கேட்டவுடன் எனக்கு பதில் சொல்லமுடியவில்லை. நான் சொன்னேன்.

அம்மா என்னால் உங்களது குணாதிசயங்களைப் பற்றி மட்டும் வேண்டுமானால் சொல்லமுடியுமே தவிர மற்றபடி என்னால் பலன்கள் எல்லாம் கூறமுடியாது என்றேன்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பலன் எப்படி கூறுவது யாரிடம் இது பற்றி கேட்கலாம் என்று யோசித்தபோது எனது நண்பர் திரு ஜயந்தி ரவி அவர்கள் இதற்கு பாரம்பரிய ஜோதிடத்தை முறைப்படி கற்றுக் கொள்ள வேண்டும். நிறைய விஷயம் இருக்கிறது என்றார்கள்.

உடனே எனக்கு அது சம்பந்தமான் புத்தகம் வாங்கி படிக்கவேண்டும் என்று ஆவல் எழுந்தது. வாங்கினேன் படித்தேன் புரியவில்லை.

மேலும் அதெல்லாம் கூட சில சமயம் தவறாகப் போய்விடுவதுண்டு என்று கேள்விப்பட்டதும் அந்த ஆசையும் போனது.
அதன் பிறகு ஒரு நாள் எனது அண்ணி திருமதி கீதா அவர்கள் தசாபுத்தியை பற்றி ஏதோ கேள்வி கேட்டுவைக்க‌ நான் திருதிருவென்றுவிழித்தேன்.

பிறகுதான் நல்ல முறையில் இதை கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆவல் எழுந்தது. உடனே இருப்பதிலேயே மிகவும் துல்லியமாக பலன்சொல்லக் கூடிய முறை ஒன்று திரு கிருஷ்ண் மூர்த்தி அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று அறிந்தேன்.

அவரது புதல்வர்களில் ஒருவரானதிரு ஹரிஹரன் அவர்களிடம் கற்றுக் கொண்டேன். இவர் தான் ஜோதிடத்தில் எனது முதல் குரு நாதர்.

"தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திரு நாமம் செப்பல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தாமே"

அதன் பிறகு ஹோராரி முறையில் நான் சொன்ன விஷயங்கள் எல்லாம் பலிக்க ஆரம்பித்தது. நிச்சயதார்தம், திருமணத்
தேதி போன்றவை எல்லாம் சரியாக பலிக்க ஆரம்பித்தது. ஆனாலும் எனக்குள் இன்னும் திருப்தி யடையவில்லை……………………

தொடரும்

சனி, 3 ஏப்ரல், 2010

சோதிடமும் நானும் 1

சோதிடமும் நானும் 1

முன் குறிப்பு
ஜோதிடம் என்பது ஒரு கடல் போன்றது . அதை முழுமையாக அறிந்து
கொள்ள முடியாது என்பர். உண்மையை சொல்லப் போனால் ஜோதிடத்தைப் பற்றி
எனக்கு ஒன்றுமே தெரியாது .

ஆனாலும் இந்த ஜோதிடக் கலை எப்படியோ வந்து முழுமையாக என்னைக் கவ்விக் கொண்டது எனலாம்.

எத்தனையோ ஜோதிட நிபுணர்கள் வெறும் ராசிக் கட்டத்தைக் கொண்டே டக் டக் கென்று
பலன் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஆனால் நானோ அதை கையில் வாங்கி வைத்துக் கொண்டு பேந்த பேந்த முழித்துக் கொண்டிருப்பேன்.

ஆயினும் ஜோதிடம் என்பது ஆயக் கலைகள்
அறுபத்து நான்கில் ஒன்று அல்லவா?

அந்த அற்புதமான கலையை ப் பற்றி நான் தெரிந்து கொண்டது பற்றியும் அதன் அருமை
பெருமைகளைப் பற்றியும் நானறிந்த இந்த சிறிய அளவில் எடுத்தியம்ப விரும்புகின்றேன்.

மேலும் ஜோதிடர்களிடம் செல்லும் மக்கள் எந்தெந்த மாதிரியான கேள்விகளைக் கேட்க வேண்டும் என்றும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

கடலோரத்தில் நின்றுக் கொண்டு அலையைப் பார்த்துக் கொண்டே சிப்பியைப் பொறுக்கும் ஒரு சிறுவனைப்போலத்தான் ஜோதிடத்தில் என் பங்கும்.

இருந்தாலும் அதிலேயே வியக்குமளவு விஷயங்கள் இருப்பதால் உள்ளே இறங்கி முத்தெடுக்கும் பலரைப் ப்ற்றி என்ன சொல்வது?

கடவுள் என்பது எப்படி நூற்றுக்கு நூறு உண்மையான விஷயமோ அப்படியே அவரால் படைக்கப் பட்ட அனைத்து விஷயங்களுமே நூற்றுக்கு நூறு உண்மையாகத் தான் இருக்க வேண்டும்.

ஆனால் அவைகள் எல்லாம் மனிதனால் களங்கப் படுத்தப் பட்டு விட்டன என்பதே உண்மை.